ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றி விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நோர்வே அரசு கொண்டுவரவேண்டும் என நோர்வேயின் கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் கிற்மார்க் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் நோர்வேயில் இயங்கி வருவதாகவும், அவர்களின் உறுப்பினர் ஒருவரை அண்மையில் நெதர்லாந்து காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதியாக செயற்பட்டுவரும், நெடியவன் என்பவரை கைது செய்யவேண்டும் என இலங்கை அரசும், அதற்கு ஆலோசனைகளை வழங்கிவரும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் றொஹான் குணரட்னாவும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர். அது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்ற அழுத்தத்தை கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு இலங்கை அரசு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வேண்டும் இலங்கை அரசு.”
No comments:
Post a Comment