மூன்றாம் கண்.,: இறந்தது ஒசாமா என உறுதிசெய்தது மரபணு சோதனை

Pages

Monday, May 2, 2011

இறந்தது ஒசாமா என உறுதிசெய்தது மரபணு சோதனை


இறந்தது ஒசாமா என உறுதிசெய்தது மரபணு சோதனை
அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது ஒசாமா பின்லாடன் தான் என மரபணு சோதனையில் உறுதி செய்தது அமெரிக்கா.
அமெரிக்க உயரதிகாரிகள் இது குறித்துத் தெரிவித்தபோது, ‘அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டு இறந்தது ஒசாமாவின் உடல்தான் என்று மரபணு சோதனையில் 99.9 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நம்பகத் தன்மை மிக்க புகைப்படங்கள் மூலமும், இந்த நடவடிக்கையின் போது பெற்ற புகைப்படங்கள் மூலமும், உயரம், பழக்க வழக்கம் முதலியவற்றை வைத்து ஒசாமாவின் உடல்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் அளித்த தகவல் அடிப்படையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த மக்களே இனம் கண்டு உறுதிப்படுத்தினார்கள். எனவே கொல்லப்பட்டவர் ஒசாமா பின்லேடன் தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த வீடியோ ஆதாரம் ஏதும் வெளியாகாததால், ஒசாமாதான் கொல்லப்பட்டாரா என்பது குறித்து சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. பின்லேடனின் உடல் உடனடியாக கடலில் எரிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் அவர் தலையில் குண்டடி பட்டு இறந்த புகைப்படம் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் மக்கள், அமெரிக்கப் படை நிகழ்த்திய இந்தத் திடீர் தாக்குதல் குறித்தும், துப்பாக்கிச் சூட்டினால் எழுந்த சத்தத்தைத் கேட்டு வீட்டு மாடிகளில் சென்று பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஒசாமா தங்கியிருந்த வீட்டின் மேலே ஹெலிகாப்டர்கள் பறந்தபடி இருந்ததைப் பார்த்ததாகவும், தாக்குதல் நடந்த வீட்டில் இருந்து தீயும் புகையும் வெளிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இடம் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது.

                                                             

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...