மூன்றாம் கண்.,: 8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது

Pages

Friday, May 27, 2011

8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது



ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் ராட்கோ மிலாடிக். இவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு போஸ்னியாவில் பொதுமக்கள் மீது பல குற்றங்களை இழைத்து கொடுமைப்படுத்தினார்.
இதனால் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 1992 முதல் 1995ம் ஆண்டு வரை சுமார் 8 ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தார். எனவே இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது. இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 16 ஆண்டுகளாக பல நாடுகளில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் செர்பியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இத்தகவலை செர்பியா அதிபர் போரிஸ் தாடிக் நேற்று அறிவித்தார். செர்பியாவின் பாதுகாப்பு உளவு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் செர்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...