எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியர்களுக்கான இலவச விசாவை இலங்கை இரத்துச்செய்துள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தற்போது விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்திலேயே அவர்களுக்கான விசா
வழங்கப்பட்டு வந்தது. அதேபோல பல நாட்டு பிரயாணிகளும் இவ்வாறே இலங்கை வந்துசென்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் அவர்கள், இலங்கை வருவதற்கு விண்ணப்பித்து விசா எடுத்தபின்னரே வரமுடியும் என இலங்கை இன்று அறிவித்துள்ளது. சுமார் 78 நாடுகளின் பட்டியல் அதில் அடங்குகிறது.இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவில் இருந்து இலங்கை வருவோர், இணையமூடாக, அல்லது நேரடியா இலங்கை தூதுவராலயம் சென்று விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தைக் கட்டியே விசாவைப் பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மாலை தீவு மற்றும் சிங்கப்பூர் குடியுரிமையுள்ளோர் வழமைபோல இலங்கைக்கு வரும் சமயம் விசா வழங்கப்படும் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
mappu vachittanda aappu
ReplyDelete