மூன்றாம் கண்.,: முதல்வராக மம்தாபானர்ஜி பதவியேற்கிறார்.சோனியா காந்தியும் விழாவில் பங்கேற்க மாட்டார்

Pages

Thursday, May 19, 2011

முதல்வராக மம்தாபானர்ஜி பதவியேற்கிறார்.சோனியா காந்தியும் விழாவில் பங்கேற்க மாட்டார் மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இருப்பினும் ஆட்சியில் காங்கிரசுக்கு பங்களிக்க தயார் என மம்தா அறிவித்துள்ளார்.
மம்தா அமைச்சரவையில் சேருவது குறித்து கொல்கத்தாவில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜி நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மம்தா அழைப்பு விடுத்திருந்தார். மன்மோகன்சிங் வெளிநாடு செல்வதால் விழாவில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து விட்டார். சோனியா காந்தியும் விழாவில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார். அவருடன் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஷகீல் அகமது ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...