நேட்டோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலில் இரு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்,ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியருகே வடக்கு வஸிரிஸ்தான் பிராந்தியத்தில் டற்றா கெல் பகுதியில் அமைந்திருந்த பாகிஸ்தானிய இராணுவக் காவலர்கள் மீது குறித்த ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் அல்ஹைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன்
மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேட்டோவால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலினைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் தனது நாட்டின் இறைமையை மீறும் செயலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் ஆப்கானிய எல்லைப்பகுதியருகே நேட்டோ விமானங்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளுக்கான விநியோகப் பாதையினை பாகிஸ்தான் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் வட வஸிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இக் ஹெலிகொப்டர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment