மூன்றாம் கண்.,: தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது

Pages

Tuesday, May 31, 2011

தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது
தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த மலேசிய நிறுவனத்திடம் இருந்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்குப் பணம்
பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. இதுதொடர்பாக பல கேள்விகளையும் பாஜக எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மிகவும் பொருத்தமானவர் தயாநிதி மாறன்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது பணிகளை சரியாக செய்து வருகிறது. கடந்த காலங்களில் தொலைத்தொடர்புக் கொள்கை பின்பற்றப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அக் குழு ஆய்வு செய்து வருகிறது.எனவே தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை குறித்தும் அக் குழு விசாரிக்கும். 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்றார் அவர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...