மூன்றாம் கண்.,: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் விஜய் குமார்

Pages

Sunday, May 22, 2011

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் விஜய் குமார்
அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பங்கேற்க இந்தியாவின் விஜய் குமார் தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள 7-வது இந்தியர் விஜய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது
.அமெரிக்காவின் போர்ட் பென்னிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீ. பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் விஜய் குமார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.இந்தப் பிரிவில் ஜெர்மனியின் கிறிஸ்டியான் ரெய்ட்ஸ் தங்கம் வென்றார். சீனாவின் டிங் பெங் வெண்கலம் வென்றார். இந்தியாவின் ரஞ்சன் சோதி, ககன் நரங், ஹரி ஓம் சிங், சஞ்சீவ் ராஜ்புட், ராஹி சர்னோபட், அன்னுராஜ் ஆகியோர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...