பாகிஸ்தானில் அபோத்தாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா டி.வி., பார்த்தபடி ஹாயாக இருந்துள்ளான் என்பதை காட்டும் வகையிலான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட நகரில்தான் இருந்தான் என்பதற்கு மேலும் கூடுதல் ஆதாராமாக உள்ளது . கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத் அருகே பதுங்கி இருந்தபோது அமெரிக்க படையினரால் பின்லாடன் சுட்டு கொல்லப்பட்டான். இதனை தொடர்ந்து இவரது வீட்டில் இருந்து முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஒரு சில காட்சிகள் கொண்ட வீடியோ கேசட்டை அமெரிக்கா
வெளியிட்டது. இந்த வீடியோக்களில் ஒன்றில் ஒசாமா பின்லாடன் டி.வி., பார்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்நேரத்தில் டி.வி.,யில் இவர் உரையாற்றும் படியான வீடியோவை இவரே ரிமோட் மூலம் இயக்கி பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வீட்டில் பெரும் அளவில் ஆடம்பர பொருட்கள் எதுவும் இல்லை சாதாரண மேஜை மீது ஒரு பழைய டி. வி., மற்றும் இதனை சுற்றி மின் வயர்கள் சிதறிக்கிடப்பது போன்று உள்ளது. இந்த வீட்டில் இருந்தபடி பயங்கரவாதிகளுக்கு உத்தரவிடுவது , அவர்களை செயல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு ஆதாரமாக உள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்டையில் பல்வேறு தாக்குதல் திட்டங்களை பாகிஸ்தானில் இருந்தபடி நிறைவேற்றியிருக்கிறான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை என்றார்.வெளியிடப்பட்ட வீடியோவில் ஆடியோவை அமெரிக்கா தடை செய்து விட்டது. இதன் மூலம் மேலும் ஒசாமாவின் கொள்கைகளை பரவ விடாமல் தடுக்கும் நோக்கமாக அமையும் என்றும் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்:
www.reuters.com/news/video/story?videoId=207441657&videoChannel=1
No comments:
Post a Comment