மூன்றாம் கண்.,: ஈரானில் பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது

Pages

Friday, May 27, 2011

ஈரானில் பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
ஈரானில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஈரானில்கொலை, கற்பழிப்பு ,போதை மருந்து
கடத்துதல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதுவும் பொது இடத்தில் வைத்து பலர் முன்னிலையில் வழங்கப்படுவ‌து வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஈரானில் தொடர் கொலை செய்தவர், கற்பழிப்பு குற்றம், செய்தவர்கள் , போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 5 பேர் நேற்று டெஹரானில் உள்ள ஷிராஸ் நகரில் பொது இடத்தி்ல் வைத்து தூக்கிலிடப்பட்டதாக ஈரான் குடியரசு செய்தி ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் ‌தெரிவித்துள்ளன. மேலும் இந்தாண்டில் இதுவரை ஈரானில் ‌130 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...