மூன்றாம் கண்.,: ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு தடுக்க புதிய நடைமுறை: குரேஷி

Pages

Thursday, May 12, 2011

ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு தடுக்க புதிய நடைமுறை: குரேஷி




புதுடில்லி : ""தமிழகத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முறையாக கண்காணிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கை பணிகள் தவறின்றி நடக்க, போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறினார்.
"
சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, "டேட்டா என்ட்ரி' செய்யப்படுவதை, கட்சிகளின் ஏஜன்டுகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், எண்ணப்பட்ட ஓட்டுகளை, "டேட்டா என்ட்ரி' ஆபரேட்டர்கள், சரியாக பதிவு செய்கின்றனரா என்பதை, தேர்தல் அதிகாரியும், பார்வையாளரும் உறுதி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கோரியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்த புகார்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை பணிகள் தவறின்றி நடக்க தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் முறையாக கண்காணிக்கப்படுவர்.ஒரு சுற்றில், 14 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். இந்த எண்ணிக்கை முழுமையாக முடிந்த பின்னரே, அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும். அதனால், தேர்தல் முடிவுகள் வெளிவர சிறிது தாமதமாகும்.முன்பெல்லாம், ஒரு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிந்தவுடன், அந்த மேஜைக்கு அடுத்த ஓட்டுப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்படும். ஆனால், இம்முறை அப்படி நடக்காது. தவறுகள், குழப்பங்கள் நேராமல் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை விவரங்களை பட்டியலிடவும், அதை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யவும் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அலுவலர்களே பயன்படுத்தப்படுவர். அவர்கள் முறையாக கண்காணிக்கப்படுவர்.ஓட்டு எண்ணிக்கை விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, முதல் முறையாக தேர்தல் அதிகாரி மேஜையில் நடைபெறும். தேர்தல் அதிகாரியின் மேஜையில் போதுமான இடம் இல்லை எனில், கூடுதல் மேஜைகள் போடப்படும். வேட்பாளர்களின் கூடுதல் ஏஜன்டுகளும் அங்கு அனுமதிக்கப்படுவர்.மேலும், ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணும் போதும், அதில் தெரியவந்த ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் வேட்பாளருக்கு அச்சிடப்பட்ட நகலாக தரப்படும். பின்னர் அது ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள திரையில் காண்பிக்கப்படும். அத்துடன் வீடியோவிலும் பதிவு செய்யப்படும்.அது, முறையாக பாரம் 20ல் இடம் பெறும். ஓட்டு விவரங்களை பதிவு செய்யும், "டேட்டா என்ட்ரி' ஆபரேட்டர் மேஜையில், தேர்தல் கமிஷனர் அனுப்பிய பார்வையாளர் ஒருவரும் இருப்பார்.இவ்வாறு குரேஷி கூறினார்.



Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...