மூன்றாம் கண்.,: அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது

Pages

Monday, May 30, 2011

அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது



சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு
கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம் விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர். இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர். விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது. நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்: இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

Share/Bookmark

1 comment:

  1. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...