மூன்றாம் கண்.,: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய துறை : ஜெயலலிதா

Pages

Monday, May 16, 2011

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய துறை : ஜெயலலிதா


தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா 16.05.2011 அன்று மாலை சென்றார். அங்கு முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுதிட்டார். அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின்
சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இத்துறை சிறப்புத் திட்டடங்கள் செயலாக்கத்துறை எனும் பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...