2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு
மீதான உத்தரவு திங்கள்கிழமை பிறப்பிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் அவர்கள் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் 24ம் தேதி நீதிபதி அஜித் பரிகோகே முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரிகோகே அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி ஜாமீன் குறித்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா, இல்லையா என்பது தெரியும்.
No comments:
Post a Comment