தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் தழுவும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் சில கூறுகின்றன. கலைஞர் குடும்ப தொலைக்காட்சிகள் தொலைக்காட்சிகள் நடத்திய கணிப்புகள் தி.மு.க.விற்கு சாதாகமாக இருந்தாலும், கடந்த 2006ஆம் ஆண்டு தி.மு.க. கைப்பற்றிய அளவிற்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தி.மு.க. கூட்டணி என்றும் அந்த கணிப்புகள் கூறுகின்றன. சி.என்.என் - ஐ.பி.என் நடத்திய கருத்துக் கணிப்பில் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு 120 இடங்கள் முதல் 132 இடங்கள்
வரை கிடைக்கும் என்றும் தி.மு.க கூட்டணிக்கு 102 முதல் 114இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், தி.மு.க கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிடும்போது தி.மு.க கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில் தி.மு.க கூட்டணிக்கு 115 முதல் 130 தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க கூட்டணி 105 முதல் 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூஸ் எக்ஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment