மூன்றாம் கண்.,: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தேர்வு

Pages

Saturday, May 21, 2011

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தேர்வு



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ஸ்விட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் தற்போது 14 இடங்களுக்கு உறுப்பினராக இடம்பெற பல்வேறு நாடுகளிடையே போட்டியெழுந்தது. ஆசியப் பிராந்தியத்தில் 4 இடம்
மட்டுமே இந்த சுற்றில் நிரப்பப்பட வேண்டியிருந்தது. இதில் இந்தியா கலந்து கொள்ளும் திட்டம் இருக்கவில்லை. இருப்பினும், 189 நாடுகள் கலந்து கொண்ட வாக்கெடுப்பின் போது இந்தியாவுக்கு 181 வாக்குகள் கிடைத்தது. இந்தோனேசியா (184), பிலிப்பின்ஸ் (183), குவைத் (166) ஆகிய மற்ற நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற நாடுகள்.  இந்த நாடுகளின் பதவிக்காலம் ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது. மூன்று ஆண்டு காலத்துக்கு இந்தக் கவுன்சிலில் இந்தியா இடம் வகிக்கும். இது குறித்து ஐ.நா.வில் இந்தியாவின் துணைத் தூதுவரகா உள்ள மன்ஜீவ் சிங் புரி கூறியது:
  "உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. பல மொழிகள், பல இனங்கள், வாழும் சமூகம் இங்குள்ளது. இந்தியாவின் முக்கியத்துவத்தை ஐ.நா. அங்கீகரித்துள்ளது என்பதையே நமது வெற்றி சுட்டிக்காட்டுகிறது'' என்றார் அவர். 

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...