மூன்றாம் கண்.,: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர்

Pages

Thursday, May 19, 2011

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர்


சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர், கடந்த மே மாதம் 7 ம் திகதி சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான மக்கள் நடவடிக்கை கட்சி மொத்தமுள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் 81 இடங்களில் வெற்றி பெற்றது.இதையடுத்து பிரதமர் லீ சியான் லூங், புதிய அமைச்சரவையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.முன்னாள் பிரதமரும், தனது தந்தையுமான ருமான் லீ
குவான், மற்றும், மற்றுமொரு முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் ஆகியோருக்கு அவர் புதிய அமைச்சரவையில் இடமளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கே.சண்முகத்தை வெளியுறவு துறை அமைச்சராகவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த தரமான் சண்முகரத்தினத்தை துணை பிரதமராகவும் நியமித்து மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். முன்னர் அவ் அமைச்சரவையில் கே. சண்முகம் முன்னர் உள்துறை அமைச்சராக இருந்தவர். வர்களுக்கான இப்புதிய பதவி உயர்வுகள் இந்திய, இலங்கை வம்சாவளி மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியிருக்கிறது. கே.சண்முகம் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். 52 வயதாகும் இவர் கடந்த தேர்தலில் தனது சட்டத்துறை பதவியைவும் தக்கவைத்து கொண்டார்.





Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...