தில்லி தெற்குப் பகுதியில் உள்ள கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டுக்கான ரசாயனம், இரு பென்சில் பேட்டரிகள் கண்டெடுக்கப்பட்டன.கேல்காவ்ன் மார்க் அருகே உள்ள இந்தக் கல்லூரியின் பஸ் ஸ்டாப் அருகே திங்கள்கிழமை காலையில் கேட்பாரற்று
ஒரு பார்சல் கிடந்தது. அதைக்கண்ட மக்கள், போலீஸôருக்கு தகவல் தந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து பார்சலை சோதனையிட்டபோது வெடிபொருட்கள், வயர்கள், பென்சில் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. யாராவது சிலர் பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் வெடிபொருளை போட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீஸôர் கருதுகின்றனர். ஐந்து நாள்களுக்கு முன் முன் தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இப்போது கார்கி கல்லூரியில் வெடிபொருள்கள் கிடந்தது பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது. தில்லியில் ஒரே வாரத்தில் இரண்டு இடங்களில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment