சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் மும்பையை வீழ்த்தியதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையைத் தோற்கடித்தது. கெயில் 89: முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.முன்னதாக டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் அகர்வாலும், கெயிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கெயில் 1 சிக்ஸரையும், 3 பவுண்டரிகளையும் விரட்டி மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் அகர்வாலும் வேகமாக ஆடினார். இதனால் 5 ஓவர்களில் 67 ரன்களை எட்டியது பெங்களூர். 27 பந்துகளில் கெயில் அரைசதமடித்தார். இதனால் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்களை எட்டியது அந்த அணி. அகர்வால் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பெங்களூர் 148 ரன்களை எட்டியபோது கெயில் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். றுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கெயில் இந்த ஆட்டத்தில் 89 ரன்கள் குவித்ததன் மூலம் 608 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். 43 ரன்களில் தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் பிளிஸ்ஸôர்டு 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்பஜன், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 13 ரன்களில் வெளியேற சரிவுக்குள்ளானது.
மும்பை
சச்சின் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். ராயுடு ரன் ஏதுமின்றியும், பொல்லார்டு 3 ரன்களிலும், பிராங்களின் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. பெங்களூர் தரப்பில் கேப்டன் வெட்டோரி 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுருக்கமான ஸ்கோர்
பெங்களூர்- 185/4 (கெயில் 89, அகர்வால் 41)
மும்பை - 143/8 (சச்சின் 40, வெட்டோரி 3வி/19)
No comments:
Post a Comment