நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டுமானால் இந்திய மற்றும் சீன மாணவர்களுடன் நீங்கள் கடுமையான போட்டியில் இறங்கத் தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்,அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் நேற்று மாணவர்களிடையே அதிபர் ஒபாமா பேசியதாவது: நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டும். அதற்கு (சீனா) மற்றும்(இந்தியா)
மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும். அவர்கள் கடும் பசியில் உள்ளனர். கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல நீங்களும் தயாராக வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால் ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம். ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது. நீங்கள் வேலை தேடி வெளியில் போகும் போது நாஷ்வில்லே(டென்னசியின் தலைநகர்) மற்றும் அட்லான்டா(ஜார்ஜியா மாகாணத் தலைநகர்) ஆகியவற்றின் மக்களோடு மட்டும் போட்டியிடவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு நாடு என்ற அளவில் நமது இளைஞர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ஒருசிலர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு ஒபாமா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அன்பின் சுரேஷ் கிருஷ்ணா - ஒபாமா கூறியது சரிதான் - சரியான போடி தான் - இந்திய மற்றும் சீன மாணவர்கள் அமெரிக்க மாணவர்களுடன் ஒப்பு நோக்கும் போது திறமை வாய்ந்தவர்கள் தான். நட்புடன் சீனா
ReplyDeleteWhy Dont you remove word verification which is useless
ReplyDelete