மூன்றாம் கண்.,: புலிகளின் முக்கியத் தளபதி நெடியவன் கைது

Pages

Friday, May 20, 2011

புலிகளின் முக்கியத் தளபதி நெடியவன் கைது

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன், நார்வே நாட்டில் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நார்வேயில் உள்ள நெடியவன் வீட்டை
எல் சல்வடார் நாட்டில் இருந்து வந்த சர்வதேச போலீஸார் சோதனை நடத்தியதுடன் அவரை கைது செய்ததாகவும், பின்னர் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிப்பதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நார்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் நெடியவன், விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் நிதி திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...