பாகிஸ்தானில் ஒஸாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் அபோடாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வசித்து வந்த அல்-காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன்,கடந்த 2 ஆம் தேதியன்று, அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட சிஐஏ குழு, இன்று காலை அபோடாபாத்தில் பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தியதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-காய்தாவின் தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தொடர்பான ஆதாரங்கள் அல்லது வரைபடங்கள் ஏதேனும் அபோதாபாத் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிஐஏ அதிகாரிகள் அதிநவீன கருவிகளுடன் சோதனை நடத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment