பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்து அதனை கைப்பற்றி உள்ளிருந்து முற்றுகையிட்ட தாலிபான்
தீவிரவாதிகளிடமிருந்து, 18 மணி நேர கடும் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவம் நேற்று மீட்டது. பாகிஸ்தான் தாலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில்,அமெரிக்கா வழங்கிய இரண்டு பெரிய உளவு விமானங்களும், 12 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருந்தது. ஒஸாமா பின்லேடனை கொன்றதற்கு பழி தீர்க்கவே இத்தாக்குதலை தாங்கள் நடத்தியதாக தாலிபான் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தில் தீவிரவாதிகள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடற்படையில் இந்த ஊடுருவல் நிச்சயம் இருக்கலாம் என்று பாகிஸ்தான் இராணுவம் நம்புகிறது. இந்த ஊடுருவலால் தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் கிடைத்துவிடுமோ என்ற பீதியும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகளிடையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment