மூன்றாம் கண்.,: பாகிஸ்தானில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

Pages

Monday, May 16, 2011

பாகிஸ்தானில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

 பாகிஸ்தானில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் தூதராக பணியாற்றியவர் அல் ஹதானி.  இவர் ஞாயிற்றுக்கிழமை கராச்சி நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவருடைய காரை வழிமறித்தனர். அவர்கள் காரை நோக்கி
துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அல் ஹதானி குண்டு பாய்ந்து காரினுள்ளேயே இறந்தார். அவருடைய உடலில் 12 குண்டுகள் பாய்ந்திருந்தன. இதற்கு எந்த தீவிரவாத குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க கடந்த 11-ம்தேதி கராச்சியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் கட்டிடம் லேசாக சேதம் அடைந்தது. அந்த குண்டு வெடித்த 5 நாள்களுக்கு பின்னர் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...