மூன்றாம் கண்.,: குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி விஜயகாந்த்

Pages

Friday, May 13, 2011

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி விஜயகாந்த்

சட்டசபை தேர்தலில், தேமுதிக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், தேமுதிக அலுவலகத்திற்கு வந்த கட்சி தலைவர் விஜயகாந்த், அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந்த் கூறியதாவது, இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, மக்களுக்கும், கட்சி
தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. இதன்மூலம், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு திசை மாறும், தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து அதிகம் கருத்து கூற விரும்பவில்லை. இதுவரை மக்கள் அனுபவித்து வந்த பிரச்னைகள் இனி மெல்ல மெல்ல குறையத் துவங்கும் என்று அவர் கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியின் போது உடனிருந்தார்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...