பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2ந் திகதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதை தொடர்ந்து அல் கொய்தா இயக்கத்தின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. பின்லேடனுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் அல்மான் அல் ஜவாகிரி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் சர்வதேச அளவில் அல்கொய்தா இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து
வருகிறார்.அதற்கு பொருத்தமான நபர் யாரும் இல்லாத பட்சத்தில் அப்பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிக்கிறார். மேலும் இந்த இயக்கத்தின் காப்பாளராகவும் செயல்படுகிறார். எனவே அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக சைபால் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எகிப்தை சேர்ந்த இவர் அங்கு முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். எகிப்தில் இவர் அல்மான் அல் ஜவாகிரியுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக மொகமத் முஸ்தபா யாம்னி என்பவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளார்.இதை தொடர்ந்து சைபால் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தவிர அத்னன் அல் கொஷ்ரி தகவல் தொடர்பாளராகவும், மொகமத் நசிர் அல் வாஷி அபுநஷீர் ஆப்பிரிக்கா விவகாரங்களை கவனிப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தான்-வசிரிஸ்தான் விவகாரங்களையும் இவர் கூடுதலாக கவனிக்க உள்ளார். அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் மகன்கள் யாருக்கும் எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்த இயக்கத்தில் பதவி வகிக்க யாரும் விரும்பவில்லை என தெரிகிறது.
No comments:
Post a Comment