ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்தரம் வாய்ந்த எண்ணெய்வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் சஞ்சார் பகுதியை சேர்ந்த சரஸ்வதி பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து எடுக்கப்பட்டு வரும் இயற்கை எண்ணையை அருகில் உள் ளகுஜராத் மாநிலத்தில் உள்ள மங்களா டெர்மினலு<க்கு சுத்திகரிப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 250 பேரல் ஆயில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் கிடைக்கும்பகுதியை முழுமையாக ஆராயும்பட்சத்தில் அதிக வருவாய் கிடைக்கும் வகையில் எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியும் என மங்களாசுத்திகரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள மங்களா எண்ணெய் சுத்திகரிப்பு மையம் சார்பில் 1.25 லட்சம் பேரல்கள் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் சுமார் 250 கோடி அளவிற்கு வருவாய் பெற முடியும் என்றும் மாதம் தோறும் சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனைவரி செலுத்த முடியும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment