மூன்றாம் கண்.,: பீகாரில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்

Pages

Tuesday, May 17, 2011

பீகாரில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்
பீகாரில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பீகார் போலீசார் கூறியதாவது: முஜாபர்பூர் பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால், நீண்ட நாளாக தேடப்பட்டு வந்தவர்கள். இவ்வாறு
போலீசார் கூறினர். திரிபுரா மாநிலம் அகர்தலாவில், தடை செய்யப்பட்ட திரிபுரா தேசிய புரட்சிகர முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த நக்சலைட்கள் ஒன்பது பேர், பாதுகாப்பு படையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, சரண் அடைந்தனர். இவர்களிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், ஆதரவாளர் என கருதப்படும் அலி முகமது மீர் என்பவர், குப்வாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம், பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...