மூன்றாம் கண்.,: இலங்கையில் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டார்.

Pages

Saturday, May 28, 2011

இலங்கையில் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் தாக்கப்பட்டார்.யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) மர்ம கும்பல் ஒன்றினால் சராமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தற்சமயம்
அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.கதிரவன் எனும் குறித்த நபர், இன்று காலை 6.30 மணியளவில் வழமை போல தொழில் நிமித்தம் உதயன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் வைத்து இனந்தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவொன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட்டுக்கள் கொண்டு இவர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. உதயன் நாளிதழில் மிகநீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் முக்கிய கட்டுரைகளை எழுதிவரும் இவர் சமீபத்தில் ஈ.பி.டிபி யுடன் தொடர்புடைய நபர் ஒருவரால் உதயன் காரியாலயத்தில் வைத்து மிரட்டப்பட்டதாக தமிழ்நெட் செய்தி தளம் கூறுகிறது.Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...