மூன்றாம் கண்.,: பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா பதவியேற்பு விழா

Pages

Saturday, May 14, 2011

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா பதவியேற்பு விழா






நாளை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்திக்கவுள்ளதாகவும், அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 16ம் தேதி, திங்கள்கிழமை, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கலாம் என்று தெரிகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 118 இடங்களைவிட மிக அதிகமான தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக
தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக சென்னை வருமாறு அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டது. அதன்படி மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினர். பலர் நள்ளிரவுக்கு மேல் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தனர்.இன்று அவர்கள் அனைவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து இன்று பிற்பகலில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இக் கூட்டம் இன்று நடக்கவில்லை. இக் கூட்டம் நாளை தான் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில் ஜெயலலிதாவை சட்டசபை கட்சித் தலைவராக (முதல்வராக) எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடு்ப்பர். அதைத் தொடர்ந்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார். இதையடுத்து திங்கள்கிழமை அவர் முதல்வராகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா:

ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.ஜெயலலிதா பதவியேற்புடன் அமைச்சர்கள் குழுவும் பதவியேற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நாளை ஓ.பன்னீர் செல்வம்
, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாகப் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது, அதிமுக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.


நாளை ஆளுநரை சந்திக்கிறார்:

இந் நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா
, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அதிமுக செயல்படும். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் நன்மதிப்பை பெறுவோம். அதிமுகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி திமுக மீதான எதிர்ப்பு அலைகளால் கிடைத்தது அல்ல, தமிழக மக்கள் அதிமுக மீது கொண்டுள்ள நம்பிக்கை, மதிப்பின் பிரதிபலிப்பு. நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளேன். அதற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். ஆளுநரைச் சந்தித்த பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும் தேதி, இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஜெயலலிதா ,இந் நிலையில் தேர்தலில் வென்ற பின்னர் இன்று முதல் முறையாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அவரை வழியெங்கும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் நீந்தி வந்த ஜெயலலிதாவின் கார் தலைமைக் கழக அலுவலகத்திற்குள் நுழைந்தது. பின்னர் காரிலிருந்து இறங்கிய ஜெயலலிதா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பிரமாண்ட மாலையை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து அண்ணா சாலைக்குச் சென்ற ஜெயலலிதா
, அங்கு ஸ்பென்சர் பிளாசா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதை முடித்துக் கொண்ட பின்னர் ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்


Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...