ஏமனில் உள்நாட்டு போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஏமன் நாட்டில் அரசுக்கு
எதிராக பழங்குடியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு பழங்குடி படையினர் திடீரென்று தலைநகர் சானாவுக்குள் புகுந்து ராணுவத்தினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். ராணுவத்தினர் திருப்பி தாக்கினார்கள். என்றாலும் பழங்குடி படையினர் கை ஓங்கியது. அவர்கள் அமைச்சர் அலுவலகத்தையும், அரசு செய்தி நிறுவனத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போது சானா நகர தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இது வரை 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் பழங்குடியினருக்கு ஆதரவாக திரும்பி விட்டார்கள். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏமனில் 11 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment