மூன்றாம் கண்.,: சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

Pages

Wednesday, May 25, 2011

சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் தற்கொலை
இலங்கையின்  மொனராகலை மாவட்டத்தச் சேர்ந்த 33வயதுடைய பெண்னொருவர், சவூதி அரேபியாவில்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் அறிகையில்;  மதீனா- குவாஸிம் நெடுஞ்சாலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும்,
இச்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த வாகனமொன்றின் பின் கதவினை திறந்து வெளியே பாய்ந்து அப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறது. 2009ம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில், பணிப்பெண்ணாக கடமைபரிந்த இப்பெண்,  தனது பணிகளை சிறப்பாக செய்துவந்ததாகவும், ஆனாலும் இலங்கையில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களில் உரையாடிய பின் அவர் மிகவும் சோர்வடைந்து போவதாகவும், அவரது பணிவழங்குநர் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால்  இப்பெண்ணின் தற்கொலைக்குக் குடும்பப்பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான விசாரகைள் நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது.

Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...