மூன்றாம் கண்.,: சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்‌போட்டிக்கு முன்னேறியது.

Pages

Tuesday, May 24, 2011

சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்‌போட்டிக்கு முன்னேறியது.




ஐ.பி.எல்., சீசன் 4ல் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்‌போட்டிக்கு முன்னேறியது
.
ஐ.பி.எல்., சீசன் 4ல் பிளே ஆப் சுற்றுக்கள் துவங்கின. மும்பை வான்கடே மைதானத்தில் ‌நடந்‌த ஐ.பி.எல் 4ன் முதல் ப்ளே ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் ‌சேலஞ்சர்ஸ் அணியும் ‌மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக அகர்வாலும்,நட்சத்திர வீரரான கெயில்சும் களமிறங்கினர். கெயில்ஸ் ஏமாற்றம்:கெயில்ஸ் 8 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். பின் களமிறங்கிய கோஹ்லியும், அகர்வாலும் சிறப்பாக விளையாடினர். அகர்வால் 33 பந்துகளில் 34 ரன்களும், கோஹ்லி 44 பந்துகளில் 70 ரன்களும் எடுத்து அணி வலுவான ஸ்கோர் எடுக்க உதவினர். தொடர்ந்து களமிறங்கிய டிவிலியர் 11 ரன்களும், போமர்ஸ்பாச் 18 பந்துகளில் 29 ரன்களும், திவாரி 6 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது. செனனை அணியின் தரப்பில் பொலிங்கர், அஸ்வின், பிரேவோ, ஜகாடி தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் சென்னை அணிக்கு வெற்றி இலக்கு 176 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை வெற்றி:தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சியாக 0 ரன்னுக்கு ஹஸ்ஸியும், 5 ரன்னுக்கு முரளி விஜயும் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த பத்ரிநாத்(34), தோனி(29), மார்கல்(28) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ரெய்னா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இறுதியாக 19.4 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் சார்பாக ஜாகிர்கான் 2 விக்கெட்டுகளும், ஸ்ரீநாத் அரவிந்த, அபிமன்யு மிதுன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.







Share/Bookmark

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...