மூன்றாம் கண்.,: தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு

Pages

Tuesday, May 10, 2011

தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு








தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஹெட்லைன்ஸ் டுடேவும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளன. இந்த மாநிலங்களில் முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் அதிமுக முன்னிலை: சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120-130  இடங்களும், திமுக கூட்டணிக்கு 102-114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 115-130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஆட்சி மாற்றம்: 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும்,ஆளும்இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222-234 தொகுதிகளைக் கைப்பற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அசாம்: அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பின் படி, ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஹெட்லைன்ஸ் டுடேவும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளன. இந்த மாநிலங்களில் முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் அதிமுக முன்னிலை: சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62இடங்களும்கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊழல் விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120- 130 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102- 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளத்தில் ஆட்சி மாற்றம்: 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222-234 தொகுதிகளைக் கைப்பற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அசாம்: அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பின் படி, ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share/Bookmark

2 comments:

  1. திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
    அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி

    http://tamilthirati.corank.com/

    தங்கள் வரவு இனிது ஆக

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...