மூன்றாம் கண்.,: தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப் மனு

Pages

Friday, July 29, 2011

தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப் மனு


தூக்கு தண்டனையை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப், உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.


முன்னதாக மும்பை தாக்குல் வழக்கை விசாரித்த, விசாரணை நீதிமன்றம் கசாபுக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கசாப் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.மும்பையில் 2008-ல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இங்கு தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளில் கசாப் தவிர மற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.மும்பை ஆர்தர் சாலை சிறையில் கசாப் அடைக்கப்பட்டார். படுகொலை, கொலைச் சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கசாப் மீது வழக்குத் தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.

Share/Bookmark

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...